கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

கர்ப்ப ரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ளசிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட.

இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், க்ர்ப்பபையிலுள்ள
வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள்.

ஸ்ரீ மாதவீகானனஸ்தே ரக்ஷாம்பிகே
பாஹி மாம் பக்தம் ஸ்துவந்தம் /
வாபீதடே வாமபாகே வாம
தேவஸ்யதேவ்ஸ்ய தேவீஸ்திதாத்வம் /
மாந்யா வரேண்யாவதான்யா-பாஹி
கர்ப்பஸ்த்த ததா பக்த லோகான் ( ஸ்ரீ)

ஸ்ரீகர்ப்பரக்ஷாபுரயோ திவ்ய
சௌந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரி
தாத்ரீ ஜனத்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் ( ஸ்ரீ)

ஆஷாடமாஸே ஸுபுண்யே -சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம்பராகல்ப வேஷா வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ்ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)

கல்யாண தாத்ரீம் நம்ஸ்யே - வேதி
காட்யஸ்த்ரியாகர்ப்பரக்ஷாகரீம் த்வாம்
பா லைஸ்ஸதாஸேவிதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷார்த்தமாராதுபேதைருபேதாம் ( ஸ்ரீ)

ப்ரம்ஹோத்ஸவே விப்ரவித்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தைரபீட்யாம் ஜகன்மாதரம்- த்வாம் (ஸ்ரீ)

ஏதத்க்ருதம் ஸ்தோத்ரரத்னம் - தீக்ஷி
தானந்தராமேண தேவ்யாஸ்ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்த்யா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம் ( ஸ்ரீ)