அனுமனுக்கு வெண்ணெய் ஏன்?

அனுமனுக்கு வெண்ணெய் ஏன்?

ராவண வதத்திற்குப் பிறகு இரண்டுஅசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை வதம் செய்யக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்தபோது அனுமனே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவரவருக்குஉரிய ஆயுதங்களை ஆசீர்வாதம் பண்ணி அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும்,சிவபெருமானும் இன்னபிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து ‘இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய்’ என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன்படி அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார். அதுபோல நாம் வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்தகாரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்!

திருமணத் தடை நீக்கும் திருமகன்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அணிவித்து அவரை தரிசனம் செய்தால், நீண்ட நாட்களாக திருமணம் நடைபெறாதவர் களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பார்கள். அதேபோல், நீண்ட நாட்கள் குழந்தை இல்லாதவர்களுக்குகுழந்தை பாக்கியம் கிட்டும். அவருக்குவெண்ெணய்க் காப்பு அலங்காரம் செய்து தரிசித்தால், நோய்கள் நீங்கும். சந்தனக்காப்புஅலங்காரம் செய்து வணங்கினால், லட்சுமியின் அருள் கிட்டும். புஷ்ப அங்கி அலங்காரம் செய்து வழிபட்டால், மனதில் நினைத்தவை விரைவில் நிறைவேறும். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு குளிர் காலத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ெணய்க் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மற்ற எல்லா நாட்களில் சந்தனக்காப்பு அலங்காரம் மட்டுமே.

நலமருளும் நவகிரகங்கள்

தேவிப்பட்டினம் நவகிரக கோயில் வித்தியாமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நவகிரக கோயில்கடலில் உள்ளது. ஸ்ரீராமபிரான்எழுப்பிய கோயிலாகும் இது. ராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, தேவிப்பட்டினத்தில் கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டார். ராமபிரான் வழிபட்டுக் கொண்டிருந்த சமயம் கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் அவர்.

பின்னர் கடல் அமைதியடைந்தது. இதனாலேயே இன்று வரை இங்கு அலைகள் வீசுவதில்லை என்கிறார்கள். இந்த இடத்தில்தான் ராமர் சனி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என்ற வரலாறும் உண்டு. இதனாலேயே இங்கு வழிபட்டு நவகிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பார்கள். மூதாதையர்களை வழிபட மிகச் சிறந்த இடமாகவும் இது கருதப்படுகிறது. தேவிப்பட்டினம் ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவிலும்,சிவகங்கையில் இருந்து 47 கி.மீ தொலைவிலும் உள்ளது.