கண்திருஷ்டி

கண்திருஷ்டி, ஏவல் போன்ற துஷ்ட
சக்திகள் இருப்பது உண்மைதானா?

உலகில் இருவேறு சக்திகள்
இருக்கின்றன. நல்ல,
தீயசக்திகள் அவை. தேவர்களுக்கு
நேர் எதிரான அசுரர்களும்
இருந்ததை புராணங்களில்
படித்திருப்பீர்கள். அதுபோல,
அருட்சக்திக்கு எதிரான
இருட்சக்தி உலகில் இருக்கத் தான்
இருக்கிறது. கண்திருஷ்டி, ஏவல், சூன்யம்
போன்றவையும் அதில் அடக்கம். நோய் பரப்பும்
கிருமிகள் போல அவை கெடுபலன்களை
உண்டாக்குகின்றன. இதிலிருந்து தப்பிக்க
தெய்வசக்தியைத் தான்
பிடித்துகொள்ள வேண்டும்..

யோகநரசிம்மர், சக்கரத்தாழ்வார் வழிபாடு
பயன்தரும். நரசிம்ம துதியான
மந்திரராஜபத ஸ்தோத்திரத்தை பாராயணம்
செய்வது நல்லது. முடியாவிட்டால்
இயன்ற போதெல்லாம் யோக நரசிம்மம்
சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை
ஜெபித்து வாருங்கள்.

குண்டு பொம்மை குபேரன்!

குபேர பொம்மை என்ற
பெயரில், வீடுகளில் பலரும்
கையை உயர்த்தி சிரிக்கின்ற
பொம்மைகளை வீட்டில்
வைத்துள்ளனர். இதைப் பற்றிய
குறிப்புகள் புத்தமத
இலக்கியங்களில் இடம்
பெற்றுள்ளன. சீனா, மலேசியா,
சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான்
நாடுகளில் சிரிக்கும் நிலையில் உள்ள குண்டு
குபேரன் சிலையை, கண்திருஷ்டி போவதற்காக
வழிபடுகின்றனர். குள்ளஉருவம்,
கள்ளமில்லாத சிரிப்பு, கனத்த
தொப்பை,கையில் பொன்மூட்டை,
ஆபரணங்கள் என பொன் நிறத்தில்
இவர் காட்சியளிக்கிறார். இந்த
பொம்மை இருக்கும் இடத்தில்
செல்வவளம் நிறைந்திருக்கும் என்ற


சீனமக்கள் நம்புகின்றனர்.