ஸ்படிகம்

ஸ்படிகம் :

பூமியிலிருந்து கிடைக்கும் ஸ்படிகம் சக்தியின் அம்சமானது.
இமயமலைச் சாரலில் உள்ள நேபாள நாட்டில் சில முக்கிய இடங்களில் உள்ள பாறைகளை உடைத்துத் தோண்டும் பொழுது அபூர்வமாகக் காணப்படுவதே க்ரிஸ்டல் (Crystal) வகை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். இவை பல வண்ணங்களில் கிடைத்தாலும் பன்னீர் போன்ற தெளிவான நிறத்தால் உள்ள ஸ்படிகம் தான் பிற தாதுக்களால் கலவை பெறாத உண்மை ஸ்வர்ண ஸ்படிகம் ஆகும். ஸ்வர்ண ஸ்படிகத்தின் அடர்த்தி எண் அதிகம். இதனால் இதன் திண்மையும் அதிகம். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் எடை அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட ஸ்படிக கற்களால் இணைக்கப்பட்ட ஸ்வர்ண ஸ்படிக மாலை உஷ்ணத்தையும், குளிர்ச்சியையும் வேகமாகக் கடத்தும் குணமுடையது.

ஒளியையும், உரிய நிறத்தையும், காந்த சக்தியையும் இந்த பிரபஞ்சத்திலிருந்து தன்னுள் ஈர்த்து வைத்துக் கொண்டு அதனை அணிபவர்களுக்கு வழங்கும் குணம் இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலைக்கு உண்டு. இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையில் மொத்தம் 108 ஸ்வர்ண ஸ்படிக மணிகள் உள்ளன. ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நக்ஷத்திர பாதத்தின் பிம்பமாக இருக்கும். தனது சக்தியை தனது அருகிலுள்ள மணிக்கு இது எளிதாக கடத்த வல்லது.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மின் காந்த நிறம் உண்டு. இந்த பிரபஞ்சத்தில் பல்வேறு நிறங்கள் எங்கும் வியாபித்திருக்கின்றன. இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிந்து கொள்பவர்கள் நிறமாலைக் கொள்கைப்படி தனக்கு அதிர்ஷ்டமாக அமைந்துள்ள நிறத்தை இந்த உலகிலுள்ள பஞ்ச பூதங்கள் மூலம் பெற்றுவிடுகின்றனர்.

இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணிபவர்களின் முகம் பிரகாசமாக இருக்கும். நரம்பு மண்டலமும், இரத்த ஓட்டமும் சீரடையும். வேலைப் பளுவினால் ஏற்படும் களைப்பு தெரியாது. இதயமும், நுரையீரலும் ஒழுங்காக இயங்கும். இதனால் ஆயுள் விருத்தியாகும். இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அரும்பெரும் மருந்து இது. நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். இது கர்ப்ப மூலாதாரங்களைத் தூண்டிவிடுவதால் புத்ர சந்தான விருத்தி இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் கிடைக்கும். தெளிவான சிந்தனையை இது தூண்டுவதால் மாணவர்களுக்குக் கல்வி சிறக்கும். குழந்தைகள் படிக்கும் மேஜையில் வைத்தால் கவனம் ஒருமுகப்படும். நல்லுணர்வை இது ஊக்குவிப்பதால் சொல் வன்மை மிகும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை அணியும் ஜோதிடர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுநர்கள் வாக்கு பலிதத்தைப் பெறுவர். இதனை அணியும் அரசாங்க அதிகாரிகள் ஆளுமையைப் பெறுவதால் துணிச்சலாகப் பணியாற்றுவதற்கு இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை உற்ற துணையாக இருக்கும். இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலை குபேர மந்திரத்தால் உருவேற்றப்பட்டது. இது பில்லி, சூன்ய, ஏவல்களை விரட்டவல்லது. இதனை அணிந்திருப்பவர்களிடம் எதிரிகள் சரணடைவர். இதனை அணிந்து சென்றால் எண்ணிய காரியங்கள் கைகூடும். வாகனத் தொழிலில் இருப்பவர்களுக்கும், அடிக்கடி வாகனத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பைக் கொடுக்கும். சுத்தமான ஸ்படிக மணியை தண்ணீரில் போட்டால் மணி இருப்பது
தெரியாது.சூரிய ஒளியில் இம்மணியை காண்பித்தால் (7 கலர் ) வானவில் ஒளி தெரியும்,
நல்ல படிகத்தை ஒன்றுடன் ஒன்று மோதினால் தீப்பொறி உண்டாகும் .இதுவே படிகத்தை சோதிக்கும் முறை.இப்படி தனக்குள் உள்ள ஒளியின் நிறமாலையை நம் உடலுக்குள் படிகமாலை அனுப்புவதை இதன் மூலம் அறியலாம்.ஸ்படிகம் பூமியிலிருந்து எடுப்பதால்
முறையான பஞ்சபூத பரிகாரம். தீட்சை மந்திரம் சொல்லாமல் மாலையாக அணியக்கூடாது.

ஸ்படிகமாலையை ருத்ராட்சம் இல்லாமல் அணியக்கூடாது. அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும் போதும் அணியக்கூடாது. ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை
தாங்கக்கூடிய சக்தி உள்ளது. ஸ்படிகலிங்கம் வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும். இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க
தரிசனம் மிகவும்சிறப்பு வாய்நதது.

.
எனவே ஸ்படிகம் அணிவது உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி.
.
எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும்.இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறை யாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம். ஸ்படிகப் பாறைகள் வாங்கும்போது விஸ்திரண வடிவில் இருக்க வேண்டும். குறுகிய துறுப்பு உள்ளதைத் தவிர்க்க வேண்டும்.

ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்ப்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள் நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி , கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத் தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது .

இந்த மணி மாலையை அணிவதால் இது தொழிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன் குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை செய்வதோடு ரத்த அழுத்த நோயை குனபடுத்துவதோடு நீரழிவு நோயையும் குணப்படுத்தும் . இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை ஜப மாலையாகப் பயன்படுத்தி மந்த்ர ப்ரயோகம் செய்தால் வேண்டிய தெய்வம் ப்ரசன்னமாதி அருள் பாலிக்கும். இது ஸ்வர்ண ஸ்படிக மாலையாக இருப்பதால் வறுமையை போக்க வல்லது. குபேர மந்திரங்களினால் உருவேற்றப்பட்ட சக்தி வாய்ந்த இந்த ஸ்வர்ண ஸ்படிக மாலையை ஆன்மீக அன்பர்கள் பெற்று எல்லா செல்வ சிறப்பையும், புகழையும், எண்ணில்லா நற்பலன்களையும் பெற்று சிறப்புற வாழ வாழ்த்துகிறோம்.