சங்காபிஷேகம் செய்வது எப்படி ?

சங்காபிஷேகம் செய்வது எப்படி ?

சிவாலயங்களில் நடத்தப்படும் சங்காபி ஷேகத்தை உன்னிப்பாக கவனித்தால், அதற்கும் மனித இனத்துக்கும் உள்ள தொடர்பு

தெரியவரும்.

முதலில் 108 சங்குகளையும் 12 ராசி குண்டங்களாகப் பிரிப்பார்கள். 12 ராசி குண்டங்களிலும் தலா 9 சங்குகள் வீதம் 108 சங்குகளை

வைப்பார்கள்.

இதையடுத்து 8 திசைகளிலும் 8 சங்குகளை இடம் பெறச் செய்வார்கள். இந்த சங்குகளுக்கு மத்தியில் பிரதானமாக

வலம்புரி சங்கு ஒன்றையும், இடம்புரி சங்கு ஒன்றையும் வைப்பார்கள்.

அந்த வலம்புரி, இடம்புரி சங்குகளை இறைவன், இறைவியாக பாவித்து பிரதிஷ்டை செய்வார்கள். இவ்வாறு அமைக்கப்படும் 118

சங்குகளும் ‘எல்லாம் ஒருவனே’ என்ற தத்துவப்படி அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்றி மலர், தர்ப்பை, மாவிலை வைத்து வேத மந்திரிகள் ஓதி பூஜிப்பார்கள். இந்த மந்திரங்களை தர்ப்பபை

ஈர்த்து சங்குகளில் உள்ள நீரை புனித நீராக மாற்றும். அந்த புனித நீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது இறைவன் மனம்

குளிர்ந்து நாம் கேட்டதை எல்லாம் தருவார் என்பது நம்பிக்கை.